Kathamma Movie Stills!!! ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார் இயக்கும் ‘காத்தம்மா’!!!

4th of November 2014
சென்னை:Tags : Kathamma New Movie Photos, Kathamma Latest Movie Gallery, Kathamma Unseen Movie Pictures, Kathamma Film Latest images, Kathamma Movie Hot Stills, Kathamma Movie New Pics.
 
பிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார் இயக்கும் படம் ‘காத்தம்மா’. போகன் வில்லா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக பிஜூ நடிக்கிறார். ஹீரோயினாக ஆதிரா நடிக்கிறார். இவர்களுடன் அசோக்ராஜ், சிவாஜி மல்லிகா, கோவை சரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். 
ஜில்லன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை பரிதி எழுதுகிறார். மில்டன் கலையை கவனிக்க, ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்கிறார். ரேய்மண்ட் படத்தொகுப்பு செய்ய, ரூபக்-நிஸ்க் திரைக்கதை, வசனம் எழுதுகின்றனர். ராய்மலமக்கேல் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எம்.டி.சுகுமார். இவர் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏறக்குறைய  50க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படம் குறித்து கூறிய எம்.டி.சுகுமார், “நமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப்பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொள்வது, பழிவாங்குவது தான் கதைகளாக்கப் பட்டுள்ளது. இந்த படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணான ‘காத்தம்மா’ எப்படி பழிவாங்கினால் என்பது கதையாக்கப் பட்டுள்ளது.

இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக்கொண்ட பிறகு தான் நடிக்கவே ஆரம்பித்தார்.  இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.

கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.” என்று தெரிவித்தார்.

















Comments