டூப் இல்லாமல் நடிக்கும் அதர்வா!!!

4th of November 2014
சென்னை:அதர்வா தற்போது ரவி அரசு இயக்கத்தில் ஸ்ரீ திவ்யாவுடன் இணைந்து ஈட்டி படத்தில் நடித்து வருகிறார்,மற்றும் சந்தோஸ் இயக்கத்தில் கேத்ரின் தெரசாவுடன் இணைந்து கணிதன் படத்தில் நடித்து வருகிறார்.
 
இதற்கிடையில்,சற்குணம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் சந்தோஷ் இயக்கத்தில் நடித்து வரும் கணிதன் படம் ரொமவே வித்தியாசமாக இப்படத்தில் நடிக்க வேண்டியா ஒவ்வொரு நாளுக்கான காட்சியையும் அதர்வா இயக்குனரிடம் முன்தினமே கேட்டு கொண்டு அடுத்தநாள் அந்த காட்சியை முழுசாக உள்வாங்கி நடிக்கிறாராம்.
 

இப்படத்தில் இடம் பெரும் ஒவ்வொரு சண்டை காட்சியிலும் டூப் போடாமல் அதர்வாவே நடித்திருக்கிறாராம், இப்படம் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என்கிறார் அதர்வா.

Comments