விஜய் ஆண்டனியின் அடுத்தது பிச்சைக்காரன்!!!

4th of November 2014
சென்னை:சினிமாவில் 2005 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார் விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு நான் படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
 
அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது அதன் பிறகு இம்மாண்டு நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
தற்போது இப்படம் தெலுங்கில் கூட ரீ- மேக் ஆகிறது தெலுங்கில் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி தற்போது ஆனந்த் இயக்கத்தில் இந்தியா-பாகிஸ்தான் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
இப்படம் முடியும் தருவாயில் உள்ளதாம் இப்படத்தை அடுத்து திருடன் ,சைத்தான் படங்களில் நடிக்க உள்ளேன் என்று கூறியிருந்தார்.
 
ஆனால் தற்போது அந்த இரண்டு படங்களையும் தள்ளி வைத்துவிட்டு இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.
 
சசி இப்படத்துக்கு டைட்டில் பிச்சக்காரன் என்று டைட்டில் சொன்னாராம் விஜய் ஆன்டனியோ இந்த டைட்டில் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.
 
பின் தன் நண்பர்களிடம் இந்த டைட்டிலை பற்றி கருத்து கேட்டாராம் இந்தமாறி டைட்டில் வைத்தால் படம் கண்டிப்பா சூப்பர் ஹிட்டாகும் என்று சொன்னார்களாம்.
 
அதனால் தற்போது இப்படத்தின் டைட்டிலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம்
 
இப்படத்தின் படபிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
பார்ப்போம் பிச்சைகாரன் டைட்டில் உள்ள இந்த படம் வெற்றி பெறுமா என்பதை.

Comments