ஐ படத்தின் இந்தி டப்பிங் உரிமையும் மிகப்பெரிய விலைக்கு போய்யுள்ளதாம்!!!

18th of November 2014
சென்னை:ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகியிருக்கும் “ஐ” திரைப்படம் எப்போது வெளிவரும் என இப்பொழுதே உலக அளவில் பலர் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
காரணம் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் இரண்டு ஆண்டுகள் தன்னை மொத்தமாக அற்பணித்திருக்கிறார். உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பாக தோற்றமளிக்கும் ஒரு கதாப்பாத்திரம், ராட்சஸ உருவத்திற்காக சுமார் 110 கிலோ எடையுடன் ஒரு கதாப்பாத்திரம், மனித மிருகமாக மாமிச மலை போல் தோற்றமளிக்கும் ஒரு கதாப்பாத்திரம் என வெவ்வேறு கதாப்பாத்திரங்களுக்காக தனது உடல் எடையை ஏற்றி, இறக்கி மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

முதலில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் டப்பிங் வேலைகளை காரணம் காட்டி படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடப்படாமலேயே ஒத்திவைத்துவிட்டனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் படம் எப்படியும் பொங்கலுக்கு முன்பாக திரைக்கு வந்துவிடும் என்று மனதை தேற்றிக்கொண்டனர். தற்போது கூறியது போன்று படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டடிருக்கிறதாம். அதோடு இன்னொரு புறம் படத்திற்கான வியாபாரமும் ஜோராக நடைபெற்று வருகிறதாம்.
ஏற்கெனவே தெலுங்கு டப்பிங் உரிமை நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐ படத்தின் இந்தி டப்பிங் உரிமையும் மிகப்பெரிய விலைக்கு போய்யுள்ளதாம். பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டனின் கணவர் அனில் தடானி இதனை பெரிய விலை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதுவும் இதற்கு முன்பு ஹிந்தியில் டப்பிங்கான தமிழ்ப் படங்களுக்கு கொடுக்கப்பட்ட விலையை விட இரண்டு மடங்கு அதிகமாம். அனில் தடானி பல பாலிவுட் படங்களை விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவிலேயே 'ஐ' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments