சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் படத்திற்கு யு சான்றிதழ்!!!

20th of November 2014
சென்னை:சித்தார்த் நடிப்பில் ‘காவியத்தலைவன்’ ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதற்கிடையில் சித்தார்த்தின் அடுத்தப்படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
 
லூசியா என்ற பெயரில் உருவான கன்னடப்படம் ஆயிரம் பேர் நிதியுதவியுடன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தின் ரீமேக்காக ‘எனக்குள் ஒருவன்’ படம் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த் நாயகனாவும் தீபா சன்னிதி நாயகியாக நடித்திருக்கிறார்கள். பிரசாத் ராமர் இயக்கியிருக்கிறார். சி.வி. குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சென்சார் போர்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஷங்கரின் ‘ஐ’ படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதால் ‘எனக்குள் ஒருவன்’ படம் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments