Takkar Movie Stills!!! பிரேம்ஜி அமரனுக்கு ஜோடியான மீனாட்சி தீட்சித்!!!

19th of October 2014
சென்னை:Tags : Takkar New Spicy Stills, Takkar Actress Latest images, Takkar New Hot Gallery, Takkar Unseen Photoshoot, Takkar Actress New Pictures, Takkar Latest Photos, Takkar Hot Pics in Saree.
 
ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் எஸ்.யுவராஜ் - எல்.கீ.எஸ்.மீடியா சார்பில் கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம் 'டக்கர்'. இதில் நாயகனாக பிரேம்ஜி அமரன் நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக அருந்ததி நடிக்கிறார்.

கார் பந்தயத்தில் கலந்து கொண்டு அதிவேகமாக கார் ஓட்டும் வீரராக பிரேம்ஜி அமரன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பெங்களூரில் முடித்து, அந்தமான் காடுகளிலும் படப்பிடிப்பு தொடர்கிறது.

விஞ்ஞான ஆராய்ச்சியும் இடம்பெறும் இதில் காமெடி, ஆக்ஷன், திரில் என பல பரிமாணங்களில் வளர்ந்து வருகிறது படம்.

வி.தி.வி கணேஷ், யோகி ஜே.பி, ஜான்விஜய், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி என நிறைய பேர் நடிக்கும் இதன் ஒளிப்பதிவை சலீம் கவனிக்கிறார். மேலும் இதில் கங்கை அமரனும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியநாடு படத்தில் நடித்த வில்லன் சரத், இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மிரட்டல் செல்வம் சண்டைப் பயிற்சி அளிக்க, பிரிட்டோ கலையை கவனிக்கிறார். சஜித் எடிட் செய்ய, நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.

துரிதமாக வளர்ந்து வரும் இப்படத்தை 'மதில்மேல் பூனை' படத்தை இயக்கிய பரணி ஜெயபால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.


























 

Comments