Poojai Audio Launch At Loyola Engineering College Photos!!! பூஜை’ விழாவில் விஷாலின் கல்லூரி நினைவுகள்!!!

2nd of October 2014
சென்னை:Tags : Poojai Audio Release Gallery, Poojai Songs Launch Event Stills, Poojai Movie Audio Release Photos, Poojai Audio CD Launch Pictures, Poojai Audio Release Function images.






























Tags : தனது ‘பாண்டியநாடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தான் படித்த லயோலா கல்லூரியில் நடத்தியதைப் போலவே விஷால் தற்போது தயாரித்து, நடித்திருக்கும் ‘பூஜை ’படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அக்கல்லூரியிலேயே நடத்தி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்ததோடு, அக்கல்லூரியில் படித்த மாணவன் என்ற முறையில் அந்த கல்லூரிக்கு கௌரவமும் சேர்த்துள்ளார்.

 (1-10-14) மாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்த விழாவில் படத்தின் இயக்குனர் ஹரி, ஒளிப்பதிவாளர் ப்ரியன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் லயோலா கல்லூறி நிர்வாகிகள், ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்க ‘பூஜை’ படத்தின் இசை வெளியானது.

இதனை தொடர்ந்து விஷால் பேசும்போது, ‘‘இந்த கல்லூரியில் தான் நானும் விஸ்காம் படித்தேன். ஆனால் நான் படிக்கும்போது எந்த சாதனையும் செய்ததில்லை. சொல்லப் போனால நான் மற்றவர்களுக்கு தொந்தரவுகளை தான் கொடுத்துள்ளேன். ஒரு சமயம் விஸ்காம் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. அப்போது கரண்ட் கட் ஆகி விட்டது. யாரும் பாஸாகி விடக்கூடாது என்று நான் தான் கரண்ட் ஃப்யூஸை பிடுங்கிவிட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் ஃப்யூஸை பிடுங்கவில்லை. இப்பவும் சொல்றேஎன் அப்போது நான் ஃப்யூஸை பிடுங்கவில்லை’’ என்று விஷால் சொன்னதும் மாணவ, மாணவியர் ஆர்ப்பரித்து, கரகோஷம் செய்ய அந்த அரங்கமே அதிர்ந்தது.
 
மேலும் விஷால் பேசும்போது, ‘‘நான் இக்கல்லுரியில் படிக்கும்போது எந்த சாதனையும் செய்யவில்லை என்றாலும் என் வாழ்வில், எனது வளர்ச்சியில் இந்த கல்லூரிக்கு முக்கிய பங்குண்டு. பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் கூட நான் ஆடிய அந்த நடனத்துக்கு இந்த கல்லூரியில் படிக்கும்போது நடந்த நடன நிகழ்ச்சிகளும் கலாட்டாக்களும் தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது’’ என்றார்.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்துகொள்ளாதது ஒரு குறை தான்.

Comments