விஜய்சேதுபதி பாதையில் பயணிக்கும் பஹத் பாசில்!!!

20th of October 2014
சென்னை:நஸ்ரியாவை கைபிடித்த மணாளனும் தமிழில் வெள்ளிவிழா படங்களாக தந்த இயக்குனர் பாசிலின் மகனுமான பஹத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், இரண்டு, மூன்று ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் நடிக்கவோ, அல்லது கொஞ்ச நேரமே வந்துபோகும் கெஸ்ட் ரோலில் நடிக்கவோ தயங்குவதில்லை.

இந்த விஷயத்தில் இவர் நம்ம ஊர் விஜய்சேதுபதி ,மாதிரி நீக்குப்போக்காக நடந்துகொள்கிறார். இதற்கு முன் மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோருடன் இணைந்து மல்டி ஸ்டாரர் கதைகளில் நடித்த பஹத் பாசில் தற்போது ஜனப்ரிய நாயகன் திலீப்புடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இயக்குனர் லால்ஜோசின் சிஷ்யரான ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Comments