பொங்கலுக்கு வெளியாகும் ‘ஆம்பள’!!!

 24th of October 2014
சென்னை:நடிகர் விஷால், தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த ’பாண்டியநாடு’, ’நான் சிகப்பு மனிதன்’ படங்கள் பெரும் வெற்றி பெற்றது. தற்போது விஷால் தயாரித்து நடித்துள்ள ‘பூஜை’ படம் நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள விஷால், அடுத்ததாக தயாரித்து நடிக்கும் படம் ‘ஆம்பள’. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ளது.


இதற்கிடையில், இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆம்பள படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments