ஒரு நாள் முன்பே ரிகர்சல் பார்த்துட்டுதான் நடிப்பாராம் ராய் லட்சுமி!!!

24th of October 2014
சென்னை:ராய் லட்சுமி, லாரன்ஸ்வுடன் இனைந்து நடித்த காஞ்சனா படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது , காஞ்சனா படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் தனக்கு இனி சிங்கிள் ஹீரோயின் என தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்ப்பார்த்தார் , ஆனால்  அவர் எதிர்ப்பார்த்தபடி எதுவும் அமையவில்லை , அதனால் லட்சுமி ராய் என இருந்த தன் பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிகொண்டார் , தன் பெயரை நியுமராலஜி படி மாற்றிவைத்தால் பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார் , அவர் எதிர்ப்பார்த்தது போல் படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும்.

அரண்மனை , இரும்புக்குதிரை போன்ற படங்களில் சிறிய வேடங்கள் கிடைத்தது . தற்போது அவர் எதிர்ப்பார்த்தபடி ஒரு படம் அமைந்திருக்கிறது . நடிகர் லாரன்ஸ் தான் இயக்கம் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா படத்தில் இரண்டு கதைகளில் ஒரு கதையின் ஹீரோயினாக நடிக்க கமிட்பன்னியிருக்கிறாராம்.
 
இப்படத்தில் ராய் லட்சுமிக்கு வெய்ட்டான கேரக்டராம் ,இப்படம் தனக்கு ஒரு திருப்பு முனையாக அமையவேண்டும் என்று தனக்கான காட்சிகளை படமாக்குவதற்க்கு சில நாட்களுக்கு முன்பே ரிகர்சல் பார்த்து விட்டு நடிக்கப்போகிறாராம் ராய்லட்சுமி .

Comments