செல்ஃபி புள்ள பாடல் டீசரை ஒரேநாளில் 9 லட்சம் ரசிகர்கள் பார்த்தனர்!!!

19th of October 2014
சென்னை:விஜய்-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் இப்படத்தின் பாடல் டீசர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 3 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ‘ஆத்தி’ பாடல் டீசர் ஒருநாளிலேயே 7 லட்சும் பார்வையாளர்களை தொட்டது.


இந்நிலையில், நேற்று விஜய் தனது சொந்தக்குரலில் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. பிரம்மாண்ட அரங்கில், விஜய்-சமந்தா ஆடிப்பாடிய இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒருநாளில் மட்டும் இந்த பாடல் டீசரை 9 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

‘ஆத்தி’ டீசர் வெளியிடப்பட்டு 3 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 10 லட்சத்து 89 ஆயிரத்து 83 பேர் பார்த்துள்ளனர். இன்று ‘கத்தி’ படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments