'என்னை அறிந்தால்' அஜித்தின் 55வது பட டைட்டில் !!!'என்னை அறிந்தால்' 'மாஸ் - கிளாஸ்' டைட்டில் - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்!!!

31st of October 2014
சென்னை:என்னை அறிந்தால்' என்பது தான் நீண்ட நாட்களாக ரசிகர்களை காக்க வைத்திருந்த அஜித் - கௌதம் மேனன் திரைப்படத்தின் டைட்டில். 

அஜித் படத்தின் டைட்டிலாக மாறும் வரையில் என்னை அறிந்தால் என்பது சாதாரண வார்த்தையாகத் தான் இருந்தது.
ஆனால் தற்போது அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் பல கோணங்களில் அலசப்பட்டு, சமூக வலைதளங்கள் அல்லல்படுகின்றன.
 
திரையுலக நட்சத்திரம் என்பதை மறந்து, சாதாரண ரசிகனாக திரையுலகினர் பலரும் 'என்னை அறிந்தால்' டைட்டிலை புகழ்ந்து வருகின்றனர்.

அடுத்து விஜய்யின் படத்தை தயாரிக்கவிருக்கும் தனுஷ் ட்விட்டரில் “ என்னை அறிந்தால், அஜித் சாருக்கு பொருத்தமான டைட்டில்.
பவர்ஃபுல்லான 'மாஸ் - கிளாஸ்' டைட்டில். கௌதம் மேனன் டைட்டில் தேர்ந்தெடுப்பதில் சிறந்தவர்” என்று புகழ்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் “ ‘தல'க்கு ஏத்த டைட்டில். கௌதம் மேனன் அவரது சிறந்த படத்தை கொடுப்பார்” என்று கூறுகிறார்.
வழக்கம்போல இந்தமுறை டைட்டில் தேர்ந்தெடுத்த போதும் என்னை முன்னிறுத்தி டைட்டில் வைக்கவேண்டாம், கதைக்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்று கூறிவிட்டாராம் அஜித்.
அதன்பிறகு கௌதம் மேனன் சொன்ன இந்த டைட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது....
 
ஒரு வாரம் முன்னர் வரை சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிய விஷயமாக கத்தி படம்தான் இருந்து வந்தது. கத்தி வருமா, வராதா என்பதில் ஆரம்பித்த விஷயம், கத்தி படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது என்று நேற்று வரை விவாதிக்கப்பபட்டு வந்தது.
 
ஆனால், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அந்த விவாதங்கள் அப்படியே என்னை அறிந்தால் படத்திற்கு திரும்பிவிட்டது.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் படத்தின் டைட்டில் என்னை அறிந்தால் என்பது 30ம் தேதி 12 மணி ஆனதும் அறிவிக்கப்பட்டது.
படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் என்னை அறிந்தால் தலைப்பு டிரெண்டிங்கில் வந்து விட்டது.
 
அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய அளவிலும், பின்னர் உலக அளவிலும் என்னை அறிந்தால் படப் பெயரை அஜித் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் கமெண்ட்டுகளை அள்ளி வழங்கி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.
 
படங்களின் விளம்பர யுக்தியில் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. அதில் படத்தின் தலைப்பையே இந்த அளவிற்கு பேச வைத்திருப்பது இதுவே முதல் முறை. சென்னை டிரெண்டிங்கில் “என்னை அறிந்தால், அஜித், தல 55, தல, கௌதம் மேனன், ஆப்ட், கௌதம், அறிந்தால், மேனன், என்னை, அறிந்தால், மேக் தி வே ஃபார் தல 55 டைட்டில் வித் எப்எல்” ஆகிய வார்த்தைகள் தற்போது வரை முன்னணியில் உள்ளன.
 
இந்திய டிரெண்டிங்கில் “என்னை அறிந்தால், மேக் தி வே ஃபார் தல 55 டைட்டில் வித் எப்எல், கௌதம்” ஆகிய வார்த்தைகள் முன்னணியில் உள்ளன. இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கிடைத்திருக்காத வரவேற்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments