Mosakutty Movie Stills மொசக்குட்டி படத்திற்கு யு சான்றிதழ்!!!

9th of September 2014
சென்னை:மைனா, சாட்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ’மொசக்குட்டி’.

இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஜீவன் இயக்கியுள்ளார்.

இப்படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள், இரண்டு கட்டுகளுடன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

 



Tags : Mosakutty New Movie Photos, Mosakutty Latest Movie Gallery, Mosakutty Unseen Movie Pictures, Mosakutty Film Latest images, Mosakutty Movie Hot Stills, Mosakutty Movie New Pics

Comments