Kalkandu Movie Audio Launch Stills!!! கோடிகளில் சம்பளம் கேட்டு காமெடி நடிகர்கள் தயாரிப்பாளர்களை அழவைக்கிறார்கள் : டி.ராஜேந்தர் தாக்கு!!!

20th of September 2014
சென்னை:Tags : Kalkandu Audio Release Gallery, Kalkandu Songs Launch Event Stills, Kalkandu Movie Audio Release Photos, Kalkandu Audio CD Launch Pictures, Kalkandu Audio Release Function images.
 
ராட்டினம் என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு 'கல்கண்டு' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  கதாநாயகியாக டிம்பிள் சோப்டே அறிமுகமாகிறார்.  மற்றும் கஞ்சாகருப்பு,  மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், “ டாடி ஒரு டவுட் “ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கிறார்கள்.மனோரமா, கோவைசரளாவுக்குப்பின் நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார் ஜெனிபர் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.

கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். மதன் கார்கி, விவேகா, யுகபாரதி, அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி ஏ.எம்.நந்தகுமார் இயக்குகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் இயக்குனர்கள் பி.வாசு, எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர் டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர்,  "நகைச்சுவை நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்க கூடாது, அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிபாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்.

சில நகைச்சுவை நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயம் தானா! நான்  1500 ரூபாய் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் இன்று கோடிக்கணக்கில் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை.அந்த காலத்தில் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒரு படத்தில் நடித்தே அந்த தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார். இன்று தயாரிப்பாளரை அழ வைத்து மக்களை சிரிக்க வைகிறார்கள்." என்று கூறினார்.

மற்றும் பாக்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு, பி.வாசு, நடிகர் செந்தில், மனோபாலா, மயில்சாமி, கஞ்சாகருப்பு,நடிகர் கஜேஷ், ஆனந்த்பாபு, படத்தின் நாயகி டிம்பிள்.இசையமைப்பாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் மதன்கார்கி, அண்ணாமலை, ரஞ்சனி, ஜெனிபர், இயக்குனர் தங்கசாமி ஆகியோரும் விழா குழுவினரை பாராட்டி பேசினர்.

இயக்குனர் நந்தகுமார், தயாரிப்பாளர் ஜவகர் ஆகியோர் நன்றி கூறினர்.


 


 

 



 


 

Comments