ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!!!

29th of September 2014
சென்னை::சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன.

புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் கை கோர்க்கலாம். புது கட்சிகளும் தலை தூக்கலாம் என்கின்றனர். அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம் என்றும் எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் ஆந்திர பத்திரிகைகளும் இணைய தளங்களும் செய்திகள் வெயிட்ட வண்ணம் உள்ளன.


ரஜினிக்கு ஏற்கனவே அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. 1996–ல் திமு.க. தமிழ் மாநில கூட்டணியை உருவாக்கினார். அந்த அணி சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 1998 தேர்தலிலும் அதே கூட்டணியை ஆதரித்தார்.

2004 பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தனிக்கட்சி துவங்கி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இறங்கவில்லை. மாறாக பாரதீய ஜனதாவை ஆதரித்து ஓட்டு கேட்டார். அதன் பிறகு எல்லா தேர்தல்களிலும் நடுநிலை வகித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து பாரதீய ஜனதாவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி அமைதியாக இருந்து விட்டார்.

தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்க்க மீண்டும் முயற்சிகள் டெல்லி தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி ஏற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.

Comments