கர்நாடக சங்கீதத்தை ஊக்குவிக்கும் விதத்தில் நடைபெற்ற 'அந்வேஷா'!!!

17th of September 2014
சென்னை:கர்நாடக சங்கீதத்தை ஊக்குவிக்கும் விதத்தில், இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் 'அந்வேஷா' கேள்வி-பதில் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் வருடாந்திர நிகழ்வுக்கு முன்னூட்ட நிகழ்வாக அந்வேஷா (சிறந்ததை தேடுதல்) என்ற நிகழ்ச்சியை கட்நாடக சங்கீத ஆர்வலர்களுக்காக, இன்று இந்திரா சிவசைலம் அறக்கட்டளை நடத்தியது. இந்த ஆண்டு இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் பதக்கம் வென்ற இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணா, இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அந்வேஷா என்ற இந்த போட்டிக்காக ரசிகர்களிடம் கர்நாடக சங்கீத சம்பந்தப்பட்ட கேள்விகள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. சிறந்த 30 கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த வினாக்களை அனுப்பியவர்களை போட்டியில் கலந்துகொள்ள வரும்படி அழைப்பு விடுவிக்கப்பட்டது. எல்லா வயதிற்குட்பட்டவர்களும், இந்தியாவின் எந்த பகுதியில் வசிப்பவர்களாக இருந்தாலும், இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வினாக்கள் கர்நாடக சங்கீதத்தின் பல்வேறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக இருந்தன.

டி.எம்.கிருஷ்ணா, முதல் 30 கேள்விகளுக்கு தன குழுவை சேர்ந்த, மியூசிக் அகாடமி தலைவர், என்.முரளி, மியூசிக் அகாடமியின் அட்வான்ஸ்ட் ஸ்கூல் ஆஃப் கர்னாடிக் மியூசிக்-ன் ஆசிரியர்களான திருமதி ரிதா ராஜன், டாக்டர்.ஆர்.எஸ்.ஜெயலட்சுமி ஆகியோரது பங்களிப்புடன் பதில் அளித்தார்.

நிகழ்ச்சி அரங்கம் இசை ஆர்வளர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கர்நாடக சங்கீதத்தில் பல புதிய நுட்பங்களை அறிந்துகொள்ளவும் மற்றும் டி.எம்.கிருஷ்ணாவுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு வழங்கிய இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவராலும், இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் இந்த முயற்சி வரவேற்கப்பட்டது.

மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்வேஷா திட்டத்தின் நடுவர் குழு உறுப்பினர்களான திருமதி ரிதா ராஜன், டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமி ஆகியோர், கர்நாடக சங்கீத ஆர்வலர்களுக்கும் மற்றும் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கும் இடையே இரண்டாவது வருடமாக தொடர்ந்து இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை எற்பாடு செய்து நடத்திய இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் செயல் திட்டத்தை புகழ்ந்து பாராட்டினார். பிற அளவுகொல்களோடு சேர்த்து கர்நாடக சங்கீதத்தின் பாரம்பரிய மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்திய தரமான கேள்விகளுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டு தேர்வு செய்யப்பட்டன என்றும் இந்த நடுவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

Comments