கடினமாக மோடிவேட் செய்யக் கூடிய படங்களுக்கு மட்டுமே இசையமைக்க சம்மதிக்கிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான்!!!

2nd of September 2014
சென்னை:ஆஸ்கர் விருதுகளை வென்ற பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச இசையமைப்பாளராகவிட்டார். தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில்தான் “மில்லியன் டாலர் ஆர்ம், தி ஹன்ட்ரன் ஃபூட் ஜர்னி” ஆகிய படங்களுக்கு இசையமைத்து முடித்துள்ளாராம். அதோடு ஒரு சில ஹிந்திப் படங்களுக்கும், தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பார்க்கும் வேலை தனக்கு போரடித்து விடக் கூடாது என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியிருக்கிறார்.


இப்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலையில் எனக்கு போரடித்து விடக் கூடாது என்பதுதான் எனக்கு முக்கியம். அதனால்தான் சில சரித்திரப் படங்களுக்கு இசையமைத்த பிறகு சில இளமையான படங்களுக்கும் இசையமைத்தேன். சரித்திரப் படங்களுக்கு இசையமைப்பதும் இன்பமான வேலைதான். அவை மிகவும் அனுபவத்தைத் தரக் கூடியவை. அவற்றிற்கு இசையைமக்கும் போது அந்தக் கலாச்சாரத்தைக் காண முடிகிறது.

இப்போதெல்லாம் என்னை கடினமாக மோடிவேட் செய்யக் கூடிய படங்களுக்கு மட்டுமே இசையமைக்க சம்மதிக்கிறேன். அது மிகவும் கடினமாக உள்ளது. அப்படி இல்லையென்றால் நம்முடைய ரசிகர்களை நாம் இழந்து விடுவோம். இங்கு இருப்பதை விட வெளிநாட்டில் இருக்கும் போதுதான் நான் சாதாரண மனிதனாக இருக்க முடிகிறது. சாலைகளில் என்னைச் சுற்றி யாரும் இருக்க மாட்டார்கள். என்னை அவர்கள் கண்டு கொண்டாலும் தனியாக இருக்க விடுவார்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் சாலைகளில் நீண்ட தூரம் நடந்தே பயணம் செய்வேன். இவற்றையெல்லாம் இங்கு செய்ய முடியாமல் போகிறது,” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Comments