கமல் மகள் அக்ஷரா நடிக்கும் முதல் பட ஷூட்டிங் முடிந்தது!!!

29th of September 2014
சென்னை::கமல் மகள் அக்ஷரா நடிக்கும் முதல் பட ஷூட்டிங் முடிந்தது. கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து 2வது மகள் அக்ஷராவும் நடிக்க வந்திருக்கிறார். தனுஷ் ஜோடியாக ‘ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமாகிறார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பால்கி டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே அமிதாப்  நடித்த ‘சீனி கம், ‘ஃபா ஆகிய படங்களை இயக்கியவர். இதன்

ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் தனுஷ், அக்ஷரா பற்றி குறிப்பிட்டிருந்த அமிதாப் இருவரும் யதார்த்தமாக நடிப்பதாக புகழ்ந்திருந்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம்தேதி ‘ஷமிதாப் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே ‘3 தமிழ் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக தனுஷ் நடித்திருந்தார். இப்படம் மூலம் அக்ஷராவுடனும் ஜோடி போட்டிருக்கிறார். கமலின் 2 மகள்களுடனும் ஜோடியாக நடித்த முதல் நடிகர் என்ற பெயரை தட்டிச் செல்கிறார் தனுஷ்.

Comments