டிசம்பர் மாதம் வெளியாகும் ‘கங்கா - முனி3!!!

2nd of September 2014
சென்னை:முனி இரண்டாம் பாகமான ‘காஞ்சனா’ பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் முனி மூன்றாம் பாகமான ‘கங்கா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, நாயகிகளாக டாப்ஸி, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிவீரன் இப்படத்திற்உ ஒளிப்பதிவு செய்கிறார்.

பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், வரும் செப்டமர் 4ஆம் தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளனர். தொடர்ந்து 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த காட்சிகளுடன் முழு படப்பிடிப்பும் முடைவடைகிறதாம். பிறகு கிராபிக்ஸ் காட்சிகளின் பணி தொடங்குகிறதாம்.

கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் இரண்டு மாதங்கள் தேவைப்படுவதால், படத்தை டிசம்பர் மாதம் வெளியிட லாரன்ஸ் முடிவு செய்துள்ளாராம்.

காஞ்சனா படத்தைப் போல கங்கா-வும் வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ளதாம்.

Comments