ஹீரோவான உதவி இயக்குநர்!!! Nanaiyathey Mazhaiye Tamil Movie Stills!!!

27th of August 2014
சென்னை:Tags : Nanaiyathey Mazhaiye New Movie Photos, Nanaiyathey Mazhaiye Latest Movie Gallery, Nanaiyathey Mazhaiye Unseen Movie Pictures, Nanaiyathey Mazhaiye Film Latest images, Nanaiyathey Mazhaiye Movie Hot Stills, Nanaiyathey Mazhaiye Movie New Pics.
 
கபி & அபி சித்திரக்கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘நனையாத மழையே’. இப்படத்தில் நாயகனாக அருண் பத்மநாபன் நடிக்கிறார். இவர் பல மலையாளப் படங்களில் உதவி இயக்குநராக பண்புரிந்தவர் ஆவார். இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். நாயகியாக வைதேகி நடிக்கிறார். பரத நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற இவர், கவுண்டமணி கதையின் நாஇவர்களுடன் அனுமோகன், சங்கர், நாராயணசாமி, பொள்ளாச்சி நாச்சிமுத்து, கோவை சிவா, மாஸ்டர் கபிலேஷ் கணபதி, செல்வி சக்தி ஷிவானி ஆகியோருடன் கானா பாலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செளந்தர்யன் இசையமைக்கிறார். நா.முத்துகுமார், அறிவுமதி, சீர்காழி சிற்பி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மகேந்திரபூபதி இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

படம் பற்றி கூறிய இயக்குநர் மகேந்திரபூபதி, “காதல் என்பது இன்று இல்லை என்றுமே நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போன விஷயம். காதல் சாவதற்காக அல்ல ..சாகும்வரை வாழ்வதற்கே  என்கிற ஒன்றே முக்கால் அடி திருக்குறள் மாதிரியான வரிகளை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்துள்ளோம்.

படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, கேரளா, அன்னூர், சாலக்குடி, மற்றும் மூணார் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதையடுத்து படம் வெளியாகும்.” என்றார்.யகனாக நடித்து வரும் ‘49 ஒ’ படத்தில் நடித்திருக்கிறார்.


    
































Comments