Maane Theney Paeye Movie Stills!!! கிருஷ்ணா-ஆரி மீண்டும் இணையும் மானே தேனே பேயே!!!

27th of August 2014
சென்னை:Tags : Maane Theney Paeye New Movie Photos, Maane Theney Paeye Latest Movie Gallery, Maane Theney Paeye Unseen Movie Pictures, Maane Theney Paeye Film Latest images,Maane Theney Paeye Movie Hot Stills, Maane Theney Paeye Movie New Pics.
 
நெடுஞ்சாலை’ படத்திற்கு பிறகு இயக்குனர் கிருஷ்ணா-ஆரி இணையும் புதிய படம் ‘மானே தேனே பேயே’. இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை மோகனாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர் விக்ரம் பிரபு-விஜய் இணையும் புதிய படத்திலும் கதநாயாகியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சென்ராயன், மதுமிதா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணா கூறும்போது, ஏற்கெனவே நான் இயக்கிய ‘சில்லுனு ஒரு காதல்’ காதல் கலந்த குடும்பப் படம். ‘நெடுஞ்சாலை’ படமோ நெடுஞ்சாலைகளில் நடக்கும் சம்பவங்கள். ஆனால் ‘மானே தேனே பேயே’ அந்த இரண்டு படங்களிலிருந்தும் மாறுபட்டதாக  இருக்கும். காதலை கலந்து காமெடியாக சொல்லும் படம்.

இந்த படத்திற்கு  கானாபாலா பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. சென்னை, அமெரிக்கா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று ஒரே கட்டத்தில் முடிவடைகிறது என்றார். மேலும் கூடுதல் தகவலாக இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கேற்ற படமாக ‘மானே தேனே பேயே’ இருக்கும் என்றார்.

படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். கல்சன் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ படத்தை மிகப்பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







Comments