சோழா பொன்னுரங்கம் தயாரிக்கும் 'கபடம்!!!

11th of August 2014
சென்னை:அஜித் நடித்த அமராவதி, தலைவாசல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த சோழா போன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்ஸ் மற்றும் மெளண்டன் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'கப்டாம்'.

இதில் நாயகனாக சச்சின் நடிக்க, நாயகியாக அங்கனாராய் நடிக்கிறார். இவர்களுடன் ஆதித்யா, காதல் சரவணன், அணிகா, அஸ்வின், ஹேமா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கே.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாஷி இசையமைக்க, நா.முத்துகுமார் பாடல்கள் எழுதுகிறார். எம்.கே.மணி வசனம் எழுத, கதை, திரைக்கதை எழுதி ஜோதி முருகன் இயக்குகிறார்.

படம் குறித்து கூறிய இயக்குனர், "எதிர்மறையான எண்ணம் கொண்ட ஜோடிகள் நிச்சயம் செய்துகொள்கிறார்கள். நிச்சயதார்த்ததிற்கு பிறகு இருவரும் பழகுகிறார்கள். பழக்கத்தின் போது அவளது நடவடிக்கைகள் அவனுக்கு ஒத்துப் போகவில்லை திருத்தி விடலாம் என்று முயற்சி செய்கிறான் ஹீரோ. அதில் அவன் வெற்றி பெற்றானா ? இல்லையா என்பதை விறுவிறுப்புடன் சொல்லி இருக்கிறோம்.படம் ரசிக்கும் படியான விதத்தில் இருக்கும். சச்சின் – அங்கனாராய் இருவரும் இந்த கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருகிறார்கள். இருவருக்கும் நல்ல பேர் கிடைக்கும்.

நல்ல தரமான படங்களைத் தயாரிக்கும் பட நிறுவனம் என்று பேர் வாங்கிய சோழா கிரியேசன்ஸ் மூலம் நான் அறிமுகமாகிறேன் என்பது எனக்கு பெருமையே! அத்துடன் நான் ராதாமோகன், செல்வராகவன், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறேன்.

படப்பிடிப்பு சென்னை, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. " என்றார்.
 

Comments