கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ இறுதிகட்ட டப்பிங்கில்!!!

23rd of August 2014
சென்னை:கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தின் டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்து வரும் இப்படத்தின் டப்பிங் வேலைகளில் கமல் சமந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளுக்கு அவர் டப்பிங் பேசி முடித்து விட்டாராம்.
 
ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, பார்வதி நாயர், நாசர், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் முதலானோர் நடித்துள்ளனர். ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரித்து வரும் இப்படம் பக்கா ஜாலியான ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது

Comments