இந்திய கலாச்சாரத்தில் இருந்து விலகும் ஏ.ஆர்.ரஹ்மான் - ஈரானிய இயக்குநர் புகார்!!!

18th of August 2014
சென்னை:சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, அனைகா ஆகியோரது நடிப்பில், வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் ‘காவியத்தலைவன்’. நாடக கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த், நடிகைகள் வேதிகா, அனைகா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர்கள் வருண் மணியன், சசிகாந்த், நடிகர் நாசர் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் மேடை நாடக கலைஞர்கள் 5 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குநர் மஸித் மஸித்திடம் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, அவர் என்னிடம், ”நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள்” என்று என்னிடம் கேட்டார். அவருக்கு ‘காவியத்தலைவன்’ படத்தைப் போட்டு காட்டுவேன்.” என்றார்

Comments