ஐ’ படத்தின் ஒவ்வொரு விஷயமும் ஹைலைட்ஸ்தான். லேட்டஸ்ட்டாக இப்படத்தைப் பற்றி சில தவகல்கள்!!!

13th of August 2014
சென்னை:எக்கச்சக்கசக்கமான. என சினேகா ஒரு விளம்பரத்தில் சொல்வார்... அப்படித்தான் இருக்கிறது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘ஐ’ படத்திற்கான எதிர்பார்ப்பு. ஒரே ஒரு டீஸராவது வராதா என மொத்த திரையுலகமும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது
 
‘ஐ’யின் தரிசனத்திற்காக. ஷங்கர் என்ன கதையை கையிலெடுத்திருப்பார்? விக்ரம் என்னென்ன கெட்அப்களில் வருவார்? ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் எப்படி இருக்கும்? பி.சிஸ்ரீராம் ஒளிப்பதிவில் என்னென்ன வித்தியாசங்களைச் செய்திருப்பார்? என ‘ஐ’ படத்தின் ஒவ்வொரு விஷயமும் ஹைலைட்ஸ்தான். லேட்டஸ்ட்டாக இப்படத்தைப் பற்றி சில தவகல்கள் வெளியாகியுள்ளன. அது...

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சீன மொழி உட்பட ‘ஐ’ படம் கிட்டத்தட்ட 15 மொழிகளில் வெளியாகவிருப்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். ஆனால், தமிழ்ப்படம் ஒன்றிற்கு சீன மொழியில் ‘டப்’ செய்யப்படுவது இதுதான் முதல்முறையாம். இப்படி ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக ‘டப்பிங்’ செய்யப்பட்டு வருவதால்தான் ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போகிறதாம்.
 
ஒரே ஒரு சண்டைக்காட்சியை மட்டுமே சீனாவில் 30 நாட்கள் படமாக்கியுள்ளார்களாம். இந்த சண்டைக்காட்சி சினிமா உலகில் நீண்ட நாட்கள் பேசப்படும் என்கிறார்கள். அதோடு சீனாவில் முதல்முறையாக அதிக அளவில் ரிலீஸ் செய்யப்படும் இந்தியப் படமும் ‘ஐ’ ஆகத்தான் இருக்குமாம்.

இப்படத்திற்கு சூப்பரான பாடல்களை உருவாக்கியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், அதில் ஒரு பாடலை அவரே பாடியிருக்கிறாராம். இந்தப் பாடலில் வரும் விக்ரமின் கெட்அப்பை பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தில் ‘விழிகள்’ விரியும் என்கிறார்கள்.

அதெல்லாம் சரி.... ‘‘ஹலோ ஷங்கர் சாருங்களா.... படத்தை எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க?’’ என ரசிர்கள் கேட்கும் கேள்விக்குத்தான் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

Comments