திரை விமர்சனம்:-கபடம்!!!

24th of August 2014
சென்னை:நாயகனுக்கு  துரோகம் செய்துவிட்டு, நாயகனின்   நண்பனுடன் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்குகிறார் நாயகி, இதை அறிந்த நாயகன், அதே ஹோட்டலில் நாயகியின் ரூமிற்கு எதிராக உள்ள ரூமில் தங்குகிறார்.

உள்ளே தனது காதலி வேறு ஒருவனுடன் இருக்கிறாள் என்பதை அறிந்துக்கொண்டு, அவளை கொலை செய்ய துடிக்கும் நாயகன், தனது காதலியுடன் இருப்பது தனது நண்பன் தான் என்பதை அறியாமல், அவருக்கே  போன் செய்து விஷயத்தைச் சொல்கிறார். இதைகேட்ட அவர், தனது ரூமிற்கு  எதிர் ரூமில் இருந்து தங்களது ரூமை நோட்டமிடும் நண்பனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று பரிதவிக்கிறார்கள்.

கையில் கத்தியுடன் கொலை செய்ய, தனது ரூம் கதவில் உள்ள கண்ணாடி வழியாக எதிர் ரூமை நாயகன் பார்த்துக்கொண்டிருக்க, அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்ற பதட்டத்தில் தப்பு செய்தவர்கள் பரிதவிக்க, இறுதியில் அவர்கள் தப்பித்தார்களா அல்லது நாயகனால் கொலை செய்யப்பட்டார்களா என்பது தான் க்ளைமாக்ஸ்.

பாதி படம் ஒரு ஹோட்டல் ரூமிலே நகர்கிறது. எதிர் எதிர் அறை, தனது காதலியுடன் இருப்பது தனது நண்பன் தான் என்பதை ஹீரோ அறிந்துக்கொள்வார அல்லது அதற்கு முன்பு ஹீரோ கண்ணில் மண்ணை தூவிவிட்டு அந்த பார்ட்டி தப்பித்து விடுமா, என்ற பரபரப்பு தான் படத்தின் ஹைலைட்.

படத்தின் ஆரம்பத்திலேயே காதலி, காதலனுக்கு துரோகம் செய்வதும், அவளை பழிவாங்க காதலன் கத்தியுடன், அவள் தங்கியிருக்கும் ரூமிற்கு எதிர் ரூமில் தங்கியிருப்பதும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களை சீட் நுணியில் அமர வைக்கிறது. ஆரம்பத்தில் இருக்கும் இந்த பரபரப்பு படம் முடியும் வரை இருக்கிறது.

ஆனால், இந்த விறுவிறுப்பும்  சுவாரஸ்யமும், பத்து மாதத்திற்கு முன்பு வெளியான 'உன்னோடு ஒரு நாள்' என்ற படத்தையும், ஆறு மாதத்திற்கு முன்பு வெளியான 'நேர் எதிர்' என்ற படத்தையும் பார்க்காதவர்களுக்கு தான். இந்த இரண்டு படங்களில் எதையாவது ஒன்றைப் பார்த்திருந்தால் கூட, இந்த படத்தில் உள்ள சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. காரணம் இந்த இரண்டு படங்களின் கதை தான் இந்த படத்தின் கதையும். கதை மட்டும் அல்ல, திரைக்கதை, காட்சிகள் அனைத்தும் ஒன்றே.

இந்த கதையே ஒரு ஆங்கிலப் படத்தில் இருந்து சுட்டது என்பது வேறு கதை. ஆங்கிலப் படத்தை சுடுவது தமிழ் சினிமாவில் சகஜமான ஒன்றாகிவிட்டது என்பது அனைவரும் அறிவர். ஆனால், தமிழில் வெளியான, அதுவும் முழுசாக ஒரு ஆண்டு கூட ஆகாத, ஒரு படத்தையே இப்படி பலர் படமாக்குவது தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பத்திரிகையாளர்களுக்காக போடும் காட்சியில்  படம் பார்க்கும் நமக்கே கடுப்பாக இருக்கிறதே, காசு கொடுத்து ஒரே படத்தை, வெவ்வெறு நடிகர்கள் நடிப்பில், வெவ்வெறு தலைப்பில் பார்த்தால் ரசிகர்கள் எப்படி கருப்பாவார்கள்.

தற்போதைய காலகட்டத்தில், பொதுமக்கள் திரையரங்கத்திற்கு வந்து படம் பார்ப்பது குறைந்து விட்டது என்று திரையுலகினர் புலம்புகின்றனர். ஆனால், இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, திரையுலகில் இருப்பவர்களே திரைப்படங்களைப் பார்ப்பதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

படத்தில் நாயகனாக நடித்துள்ள சச்சின், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். புதுமுகம் அங்கனா ராய், கவர்ச்சிக்கு வச்சனைக்  காட்ட மாட்டார் என்பது  ரொம்ப நன்றாக தெரிகிறது. ஆல் தி பெஸ்ட் மேடம்.

Comments