தனுஷுக்கு யோகா கற்றுத்தந்தார் எழுத்தாளர் பாலகுமாரன்!!!

24th of August 2014
சென்னை:90களின் ஆரம்பத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் நடிகர் கரிகாலன். தற்போது நடிப்புடன் ரியல் எஸ்டேட்டில் பிசினஸிலும் கால் பதித்துள்ள அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் வீட்டுமனைகளை விற்றுச் சாதனை படைத்ததுடன், இன்று நிலம் மற்றும் கட்டுமானத்துறையில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்.
 
இவரது கேகேகே எம்பயர் நிறுவனம் வழங்கும் சென்னை – புதுப்பாக்கத்தில் கிரீன் பீஸ் நிறுவனம் கட்டும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 100 சொகுசு வீடுகளடங்கிய ‘தி அட்ரஸ்’ என்னும் குடியிருப்பு வளாக அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
 
எழுத்துலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி உலகம் முழுவதிலும் கணிசமான அளவில் தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை வைத்திருக்கும் எழுத்தாளர் பாலகுமாரான், தி அட்ரஸை அறிமுகப்படுத்தி வைத்தார். நாயகன், பாட்ஷா, ஜென்டில்மேன் உட்பட பிளாக் பஸ்டர் படங்களின் உயிர்ப்பான வசனங்களுக்கு சொந்தக்காரர் சாட்சாத் இவரே தான்.
 
இந்த விழாவில் தனது பேச்சில் சங்க கால கரிகாலச் சோழனுடன் நடிகர் கரிகாலனை ஒப்பிட்டுப் பேசிய பாலகுமாரன் சினிமாவில் தனது சுவராஸ்யமான அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். மெடிடேசன் ஒருவரின் மனதை நிம்மதியாக்குகிறது என்று சொன்ன பாலகுமாரன் நடிகர் தனுஷின் இரண்டு படங்களுக்கு தான வசனம் எழுதியுள்ளதாகவும் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தான் பணிபுரிந்தபோது அதில் அறிமுகமான தனுஷுக்கு அப்போது யோகா கற்று கொடுத்ததாகவும் கூறினார்.
 
அதுமட்டுமல்ல, இந்துவான பாலகுமாரன் தனது பேச்சின் நடுவே கிறிஸ்துவ மத கீர்த்தனைகளை அச்சாரம் பிசகாமல் பாடிக்காட்டி அதிலுள்ள நல்ல விஷயங்களை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.

Comments