ஹன்சிகா குளிக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது!!!

22nd of August 2014
சென்னை:ஹன்சிகா குளிக்கும் வீடியோ படம் ஒன்று இணையதளத்தில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அவசரப்பட்டு நெட்டுக்குள்ள போய் தேடாதீங்க. விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்குங்க.
 
அமெரிக்காவில் ஏ.எல்.எஸ் என்ற அமைப்பு உள்ளது. இது நரம்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பு நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு நூதன திட்டம் வைத்திருக்கிறது. ஒரு பக்கெட் நிறைய ஜில்லென்ற ஐஸ் வாட்டருடன் வி.ஐ.பிக்களை சந்திக்கும். அந்த குளிர்நீரை தலையில் ஊற்றிக் குளித்தால் 10 டாலர் நன்கொடை தர வேண்டும். பயந்து குளிக்க மறுத்தால் 100 டாலர் நன்கொடை தரவேண்டும். பல வி.ஐ.பிக்கள் 90 டாலரை மிச்சப்படுத்த குளித்து விடுகிறார்கள். சிலர் அய்யோ சாமி ஆளை விடுங்க என்று 100 டாலரை தூக்கி கையில் கொடுத்து விடுகிறார்கள்.
 
சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஹன்சிகாவை பிடித்தார்கள் இந்த அமைப்பினர். அவரிடம் ஒரு பக்கெட் குளிர் நீரை கொடுத்ததும். ஹாயாக வாங்கி தலையில் ஊற்றி விட்டு எதுவும் நடக்காதது போல சிரித்தபடி போஸ் கொடுத்தார் (அருகில் உள்ள படம்). பத்து டாலர் நன்கொடையை வாங்கிக் கொண்டு அவர்கள் சென்று விட்டார்கள். ஆனால் ஹன்சிகாவின் இந்த குளியல் காட்சி இணைய தளத்தில் சக்கை போடு போடுகிறது. சரி இப்போ போய் அந்த வீடியோவை தேடுங்க. அப்படியே சானியா மிர்சா, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ், பில்கேட்ஸ், அபிஷேக் பச்சன், பிபாசா பாஸூ, அக்ஷய் குமார் குளித்த காட்சியும் இருக்கு அதையும் பார்த்துடுங்க.

Comments