28ஆம் தேதி ’வன்மம்’ பட பாடல்கள் ரிலீஸ்!!!

22nd of August 2014
சென்னை:கிருஷ்ணா - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘வன்மம்’. ஜெய் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக சுனைனா நடிக்க, இவர்களுடன் கோலி சோடா மதுசூதன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
நான் அவனில்லை’, ’அஞ்சாதே’, ’பாண்டி’ போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நேமிசந்த் ஜபக், வி.ஹித்தேஷ் ஜபக் பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, முட்டம், கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்லது. இதற்கிடையில் இப்படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகிறது.

Comments