ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் ‘வை ராஜா வை’ ஆகஸ்ட் 14-ஆம் தேதி!!!

12th of August 2014
சென்னை:ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ‘வை ராஜா வை’. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் எழுதியிருக்க, இளையராஜா பாடியுள்ளார். இந்த ஒரு பாடலை வருகிற 14-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

சோனி மியூசிக் நிறுவனம் இப்படத்தின் பாடல் உரிமையை பெற்றுள்ளது. இது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது, ‘‘இளையராஜா அவர்களின் தெய்வீகக் குரலில் நான் எழுதிய பாடல் வெளியாவது அளவற்ற சந்தோஷமாக உள்ளது’’ என்கிறார்.

Comments