Enga Kaatula Mazhai Movie Stills!!! நாய்கூட பன்ஞ் டயலாக் பேசும்!!!

6th of July 2014
சென்னை:Tags : Enga Kaatula Mazhai New Movie Photos, Enga Kaatula Mazhai Latest Movie Gallery, Enga Kaatula Mazhai Unseen Movie Pictures, Enga Kaatula Mazhai Film Latest images, Enga Kaatula Mazhai Movie Hot Stills, Enga Kaatula Mazhai Movie New Pics..
 
ஹீரோக்கள்தான் பன்ஞ் டயலாக் பேச வேண்டுமா? ஒரு நாய்கூட பன்ஞ் டயலாக் பேசும். பேச வைத்திருக்கிறார்கள் எங்க காட்டுல மழை என்ற படத்தில். குள்ளநரிக்கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி தற்போது இயக்கி வரும் படம் இது.
 
எங்கேயும் எப்போதும், சென்னையில் ஒரு நாள் படத்தில் சிறு வேடங்களில் நடித்த மிதுன் ஹீரோவாக நடிக்கிறார். அப்புக்குட்டி செகண்ட் ஹீரோவாக நடிக்கிறார். கன்னட நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஹீரோயின். இவர்களுடன் போல்டன் ரெட் ரீவர்ஸ் என்ற உயர்வகை நாய் ஒன்றும் நடித்திருக்கிறது.
 
படம் பற்றி இயக்குனர் ஸ்ரீபாலாஜி கூறியதாவது: ஊரில் இருந்து சென்னைக்கு வரும் மிதுனும், அப்புக்குட்டியும் இங்கு சொகுசாக வாழ்கிறார்கள். எந்த வேலைக்கும் போகாமல் இருவருமே தங்களுக்கு செலவு செய்ய ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டு ஜாலியாக திரிவார்கள். இப்படியும் சிலபேர் சென்னையில் வாழ்கிறார்கள் என்பதை காட்டுகிறோம்.
 
மிதுன், ஸ்ருதியை காதலிப்பார். ஆனால் ஸ்ருதிக்கு மிதுன் மீது காதல் கிடையாது. நல்ல நண்பராக பார்ப்பார். ஸ்ருதிக்கு நிச்சயிக்கப்படும் மாப்பிள்ளையை பற்றி துப்பறிந்து சொல்லுமாறு ஸ்ருதி மிதுனுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுக்கிறார். நிச்சயித்த மாப்பிள்ளையை விரட்டிவிட்டு மிதுன் எப்படி ஸ்ருதியை காதலிக்க வைக்கிறார் என்பது தனி கதை. இரண்டையும் ஒன்றாக இணைத்து ஜாலியாக போகும் படம்.

இதில் மிதுனுக்கும், அப்புக்குட்டிக்கும் இடையில் ஒரு நாய் நடிக்கிறது. இருவரும் அடிக்கும் கூத்துகளுக்கு நடுவில் அந்த நாய் பன்ஞ் டயலாக் பேசுவதாக மைண்ட் வாய்ஸ் வைத்திருக்கிறோம். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம். என்கிறார் ஸ்ரீபாலாஜி.
 

 


Comments