பாருங்கப்பா துணிச்சலை: கமலுடன் மோத தயாராகும் சிவகார்த்திகேயன்!!!


24th of July 2014
சென்னை:விஸ்வரூபம் படத்தை அடுத்து கமல் நடித்தபடம் விஸ்வரூபம்2. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் முடிவடைந்தும்  நிதி சிக்கல் காரணமாக எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை.
 
இதற்கிடையே கமல் லிங்குசாமி தயாரிப்பில் நடித்துவரும் படம் உத்தமவில்லன்.  ர
மேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே தினத்தில் சிவகார்த்திகேயன் படமும் வெளியிடும் பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. மான் கராத்தே வெற்றிக்குபின்  சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் டாணா. தனுஷ் தயாரிப்பில் ஸ்ரீ திவ்யா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களின் எதிபார்ப்பும் அதிகமாகவே உள்ளது.
 
கமல் போன்ற முன்னனி நடிகர்களுடன் படத்தை ரிலிஸ் செய்ய அனைவரும்
தயங்கும் போது, சிவா துணிந்து படத்தை வெளியிடுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Comments