லிங்கா’ படப்பிடிப்புக்கு தொடரும் சிக்கல்கள்!!!

4th of July 2014
சென்னை:கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்த கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். இதற்கு அந்த கிராம மக்கள் கூறும் காரணம், 
 
லிங்கா’ படத்திற்காக சாம்பல் நிறத்தில் மிகப்பெரிய கோட்டை செட் ஒன்று போடப்பட்டுள்ளது. இந்த கோட்டை செட் அமைக்க பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வர்ணம் பூச ரசாயனங்கள் இப்படி பல பொருட்களை உபயோகித்திருக்கிறார்கள். இந்த ரசாயன கலவை எல்லாம் அருகே உள்ள நீர் நிலைகளில் கலப்பதால் அதன் நிறம் மாறி மாசுப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ளோருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
அதனால் நாங்கள் இங்கு படப்பிடிப்பை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று மாவட்ட் ஆட்சியரிடமும் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ’லிங்கா’ படக்குழுவினர் இங்கு படப்பிடிப்பு நடத்த அரசாங்கத்திடம் முறையாக அனுமதி பெற்றுதான் அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம். முதலில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் தொடங்கியபோது அங்கும் சில கன்னட ஆதரவாளர்கள் படப்பிடிப்பை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு தொடர்ந்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இப்போது ஹைதராபாத்திலும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் லிங்கா படக்குழுவினர் கொஞ்சம் வருத்தம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Comments