அஞ்சலிக்கு போட்டியாக உள்ளேவரும் கேத்தரின் தெரசா!!!

24th of July 2014
சென்னை:தமிழில் ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பதன் மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் கேத்தரின் தெரசாவை தேடி சில பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் சுராஜ் டைரக்ஷனில் ஜெயம் ரவி நடிக்கும் படம். ஏற்கனவே இதில் அஞ்சலி ஒரு கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சாலிகிராமம் பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு ஜெயம் ரவியும் அஞ்சலியும் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டன. தற்போது இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக கேத்தரின் தெரசாவும் உள்ளே நுழைகிறார்.

அஞ்சலி கிராமத்துப் பெண்ணாக நடிப்பதால் நகரத்து நவ நாகரிக மங்கையாக நடிக்க நல்ல ஒரு ஸ்டைலிஷான அழகான நடிகையை தேடியவர்களின் கண்களில் கேத்தரின் தெரசா பட, அவரை அந்த கேரக்டரில் பிக்ஸ் செய்துவிட்டார் சுராஜ். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இந்த இருவரில் யாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

Comments