Karthikeyan Movie Audio Launch Photos!!! இரு மொழிகளில் தயாரான ‘கார்த்திகேயன்’ இசை வெளியானது!!!

18th of June 2014.
சென்னை:Tags : Karthikeyan Audio Release Gallery, Karthikeyan Songs Launch Event Stills, Karthikeyan Movie Audio Release Photos, Karthikeyan Audio CD Launch Pictures, Karthikeyan Audio Release Function Images.

தயாரிப்பாளர் தந்தையாக இருந்தாலும் அவரிடம் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது என்றார் டைரக்டர் ராஜா.நிகில், சுவாதி நடித்துள்ள படம் ‘கார்த்திகேயன். எம்.சந்து டைரக்ஷன் செய்கிறார். வெங்கட ஸ்ரீனிவாஸ் தயாரிக்கிறார். சேகர் சந்திரா இசை அமைக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ‘ஜெயம் ராஜா பேசும்போது, ‘இப்படத்தின் தயாரிப்பாளர் பேசும்போது பட இயக்குனரை பாராட்டினார். எப்போதுமே தயாரிப்பாளரிடம் அப்படத்தின் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது. செலவு இழுத்துவிட்டார்கள், ஷூட்டிங் டிலே அப்படி இப்படி என்று ஏதாவது ஒரு குறை சொல்வார்கள்.

தயாரிப்பாளர் தந்தையாகவே இருந்தாலும் அவரிடமும் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது. ஆனால் இங்கு தயாரிப்பாளர் இயக்குனரை பாராட்டியபோது சந்தோஷமாக இருந்தது. இப்பட ஹீரோ நிகில் தெலுங்கில் 10 படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயின் சுவாதி ஏற்கனவே தமிழில் நடித்திருக்கிறார். நாங்கள் ஜெயம் படத்தை தொடங்கியபோது முருகனின் வேல் படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். இப்படத்தையும் வேல் வைத்துத்தான் படமாக்கி இருக்கிறார்கள் என்றார்.ராஜா பேசும்போது அவரது தந்தையும் தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன் மற்றும் பட குழுவினர் மேடையில் அமர்ந்திருந்தனர்.












சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற கருத்தை மையமாக வைத்து ‘கார்த்திகேயன்’ என்ற படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சந்து. இந்தப்படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்கிறார். இவர் தமிழுக்குத்தான் புதியவரே தவிர தெலுங்கில் கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்துவிட்டார்.
 
மேலும் ஜெயபிரகாஷ் மற்றும் கிஷோர் இருவரும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க, ‘பண்ணையாரும் பத்மினியும்’ துளசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். சேகர் சந்திரா இசையமைத்துள்ள இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ளது.
 
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஜெயம் ராஜா, அவரது தந்தை எடிட்டர் மோகன், மற்றும் இயக்குனர் மாதேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்கள்.

Comments