பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி உள்ள ஜிகிர்தண்டா வெளியாவதில் தாமதம்!!!

30th of June 2014
சென்னை:பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி உள்ள படம் 'ஜிகிர்தண்டா'. இதில் சித்தார்த், லட்சுமி மேனன் நடித்துள்ளனர். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் படம் இன்னும் ரிலீசாகவில்லை.
 
இதற்கு காரணம் தணிக்கை குழு வழங்கியிருக்கும் யு/ஏ சான்றிதழ். பீட்சா என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் இயக்கிய படம், ராசியான நடிகை என்ற இமேஜ் ஏற்பட்டிருக்கிற லட்சுமிமேனன் நடித்த படம், தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிற சித்தார்த் நடித்த படம், இத்தனை பாசிட்டிவான விஷயங்கள் படத்திற்கு இருப்பதால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் நல்ல விலை கொடுத்து படத்தை வாங்கினர்.
 
தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் படத்திற்கு வரிவிலக்கு கோர முடியாது. வரிவிலக்கு இல்லாவிட்டால் வசூலில் 30 சதவிகித்தை வரியாக கட்ட வேண்டும். இதனால் அந்த 30 சதவிகிதத்தை படத்தின் விலையில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று படத்தை வாங்கியவர்கள் தயாரிப்பாளர்களிடம் கேட்கிறார்களாம்.
 
படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் யூ சான்றிதழ் தருவதாக தணிக்கை குழு கூறியுள்ளது. அந்த காட்சியை நீக்குமாறு தயாரிப்பாளர் இயக்குனரை கேட்டிருக்கிறார். இயக்குனரோ அந்த காட்சிகள் முக்கியமானவை அதை நீக்கினால் படத்தின் ஜீவனே போய்விடும் என்று கூறி நீக்க மறுத்துவிட்டாராம். இந்த கருத்து வேறுபாடால்தான் படம் வெளிவராமல் தாமதமாகிறாம்.-
 
பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இரண்டாவது படம் ஜிகர்தண்டா. சித்தார்த், லட்சுமிமேனன் நடிக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
 
சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
 
இந்நிலையில்...'ஜிகர்தண்டா' தென்கொரியத்திரைப்படத்திலிருந்து திருடப்பட்ட கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜிகர்தண்டா படம் விரைவில் வெளியாகவிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2006 ஆம் ஆண்டு, யூ ஹா என்ற இயக்குநரின் இயக்கத்தில் வெளியாகி, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம் 'ஏ டர்ட்டி கார்னிவல்'. இந்த திரைப்படத்தின் கதையை சுட்டுத்தான் 'ஜிகர்தண்டா' என்ற பெயரில் படமாக எடுத்திருக்கிறாராம் கார்த்திக் சுப்பாராஜ்.
 
ஜிகர்தண்டா' படத்தின் கதை என்ன?
 
நகரத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான் மிகப்பெரிய தாதா ஒருவன். தாதாவின் முக்கிய அடியாட்களை போட்டுத்தள்ளிவிட்டு குறுக்குவழியில் தாதாவின் தளபதியாகிவிடுகிற ஹீரோ, நாளடைவில் அவனும் மிகப்பெரிய தாதாவாகிறான். அவனது பள்ளிக்கூடத்தோழன் ஒருவன் சினிமா டைரக்டராக முயற்சி செய்பவன். ரௌடிகளின் வாழ்க்கையை வைத்து தன்னுடைய முதல் படத்தை எடுக்க நினைத்து தன் பள்ளி நண்பனும், ரௌடியுமான ஹீரோவை அணுகுகிறான். அவனின் வாயாலேயே ரௌடியிஸத்தைப் பற்றிய உண்மைத்தகவல்களை பெறுகிறான்.
 
இதற்கிடையில் பள்ளிக் கூடத்தில் படித்தபோது சக மாணவி மீது ஹீரோவுக்கு மயக்கம் இருந்தது. அவளை ஹீரோவுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவள் மீதுள்ள காதலில் தங்களின் ரௌடியிஸம் குறித்த தகவல்களை ஒளிவுமறைவில்லாமல் சொல்கிறான்.
 
அந்த தகவல்களை வைத்து படம் இயக்குகிறாள் நண்பன். தன்னைப்பற்றிய ரகசியங்கள் அனைத்தும் படத்தில் எப்படி வந்தது? என்று வில்லன் விசாரிக்கிறான். அந்த புதுமுக இயக்குநரிடம் விசாரிக்கும்போது உண்மை தெரிகிறது. தன் விசுவாச தளபதியான ஹீரோதான் இத்தனைக்கும் காரணம் என்று...
 
அப்புறம்? 'ஏ டர்ட்டி கார்னிவல்' (A dirty carnival) தென் கொரியப் படத்தின் டிவிடி கிடைத்தால் வாங்கிப் பாருங்க பாஸ். கார்த்திக் சுப்பாராஜ் எப்பேற்பட்ட ஆளுன்னு புரியும்.

Comments