நவீன திரைப்படங்களாக உருவாகும் எழுத்தாளர் சுஜாதாவின் கதைகள்!!!

25th of June 2014
சென்னை:1990களின் ஆரம்பத்தில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைவண்ணத்தில் உருவான ‘என் இனிய இயந்திரா’ மற்றும் ‘மீண்டும் ஜீனோ’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களை பார்க்காத துரதிர்ஷ்டசாலியா நீங்கள்? கவலையை விடுங்கள் அவை இரண்டும்தான் இனி திரைப்படமாகவே வரப்போகிறதே.
நவீன தொழில்நுட்ப கலைகளில் பிரசித்திபெற்ற சென்னையை சேர்ந்த பிக்சல் கிராப்ட்  ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர்தான்  எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய முழு நீள திரைப்படமாக ஆக்க இருக்கிறார்கள்.
 
இந்த கதைகள் வெளிவந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால்  எதிர்காலம் எப்படி இருக்கக்கூடும் என்பதை நமக்கு கண் முன் காட்டின. விஞ்ஞான வளர்ச்சி பற்றிய அறிவியல் பூர்வமான இந்த கதைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாக உள்ள இந்த காலகட்டமே சிறந்த காலம்” என்கிறார் பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் முதன்மை  அதிகாரியும் இந்தப்படங்களை  இயக்கவிருப்பவருமான சித்தார்த்.

Virtual graphics என்ற தொழில்நுட்பம் மூலம்  நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்துவிட்டு, இடம், பொருள் ஆகிய மற்ற விஷயங்களை தொழில் நுட்ப முறையில் ஒரு இடத்தில் இருந்தே  படமாக்கும்  இந்த முறையால் திரைப்படம் இயக்குவது எளிதாகும் என்கிறார் சித்தார்த். நாற்பது கோடி ரூபாயில் மிக பிரம்மாண்டமான முறையில் ‘என் இனிய இந்திரா’ தயாரிக்கப்பட இருக்கிறது.

Comments