தனக்கு உதவிய ராம. நாராயணன் உடலை பார்க்கக்கூட நேரமில்லையாம்: நன்றி மறந்த சந்தானம்!!!

26th of June 2014
சென்னை:சினிமா உலகில் மட்டும் நன்றி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை. அது காலம் தொட்டே நடந்து வருகிறது.ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம். இந்த விசயத்தில் சந்தானத்தின் செயல் அனைவரையும் வெறுப்படைய செய்துள்ளது. சொத்து ,பணம் சேர்ந்தால் மனிதன் இப்படியும் மாறுவானா என்பதற்கு சந்தானத்தின் செயல் யோசிக்கத்தான் வைக்கிறது.  மனிதன் என்றுமே தான் கடந்துவந்த பாதையை எண்ண்ப்பார்க்கவேண்டும்.  தன்னை முதன்முதலில் தயாரிப்பாளர் அந்தஸ்து கொடுத்து அழகு பார்த்த ராம.நாராயணன் மறைவுக்குகூட அஞ்சலி செலுத்த கூட செல்லவில்லை.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் மருத்துவமனையில் ராம.நாராயணனின் உயிரிழந்தது அனைவருக்கும் தெரிந்ததே. செவ்வாய்  கிழமை காலைதான் அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது. எவ்வளவு பிஸீயாக இருந்தாலும் அதனை ஒத்திவைத்துவிட்டு வருவதற்குரிய கால அவகாசமும் இருந்தது. ஆனால் எதிரிகள் கூட நேசிக்கும் அளவிற்கு நல்லமனிதரான ராம.நாராயணனின் உடல் தகனம் செய்கிற கடைசி நிமிடத்தில் வரை கூட சந்தானம் அங்கு வரவேயில்லை என்பதுதான் வேதனை.
 
சந்தானத்தின் வளர்ச்சியில் ராம. நாராயணன் என்ன செய்தார் என்கிறீர்களா? சந்தானம் வளர்ந்துவரும்போது பலரும் அவரிடம் உன்னை நாயகனாக வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறினார்களே தவிர செயலில் காட்டவில்லை. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளூக்கு முன்பே ஒரு தொகையையும் அவரிடம் கொடுத்து  நாயகனாக ஆக்கிகாட்டுகிறேன் என்றாராம் நாராயணன்.  கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தை தயாரிக்க எண்ணிய சந்தானத்தை ஊக்கப்படுத்தி  நான் உதவி செய்கிறேன் என்உ கூறி அவரை தயாரிப்பாளராக ஆக்கியவரும் அவர்தான். அந்த படத்தை தனது பேனரான தேனாண்டாள் பிலில்ஸ் சார்பில் வெளியிட்டு நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்து, சந்தானத்திற்கு மட்டுமே சுமார் பத்து கோடி லாபம் பார்த்துக் கொடுத்தவரும் அந்த மனிதர்தான்.
 
இந்த அளவிற்கு உதவியவரை எதிரியாக இருந்தாலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவான். ஆனால் சந்தானம் அதற்கும் கீழானவர் போல. தான் நடித்த வாலிபராஜா ஆடியோ வெளியீட்டுக்கு மட்டும் வந்து வாய் கிழிய பேசும் அவர் தனக்கு உதவியவரின் உடலை கடைசியாக ஒரு முறை பார்க்ககூட தோன்றவில்லையா??
 
என்ன மனித தன்னை!!! சினிமாவில் நன்றி என்ற வாத்தைக்கு அர்த்தமில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்

Comments