கடந்த இரண்டு வருடங்களாக கேள்விக்குறியான சிம்பு படங்கள்?!!!

6th of June 2014
சென்னை:கடந்த இரண்டு வருடங்களாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. அதனால், இந்த ஆண்டு எப்படியாவது இரண்டு படங்களை ரசிகர்களின் பார்வைக்கு விட்டு விட வேண்டும் என்று மெனக்கெட்டு வரும் சிம்பு, வாலு படத்தை முடித்து விட்ட கையோடு இது நம்ம ஆளு பட வேலைகளிலும் தற்போது ஈடுபட்டுள்ளார்.
 
இந்நிலையில், அவர் கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்து வந்த சட்டென்று மாறுது வானிலை, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கயிருந்த இரண்டு படங்கள் பற்றி எந்த டாக்கும் இல்லை. அதனால் இதுபற்றி சிம்பு தரப்பில் விசாரித்தபோது, செல்வராகவன் படத்தைப் பொறுத்தவரை கதம் கதம் ஆகி விட்டது. ஆனால், கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் படம் கிட்டத்தட்ட பாதி முடிந்து விட்டது. அந்த நேரம் பார்த்து, தல அஜீத் கால்சீட் கொடுத்து விட்டதால், அவர் படத்தை இயக்கியாக வேண்டிய கட்டாயம் கெளதம்மேனனுக்கு ஏற்பட்டது. அதோடு, அவரைப்பொறுத்தவரை அந்த படம் இப்போதை சூழ்நிலை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், முதலில் அந்த படத்தை முடித்து விட்டு வாருங்கள். அதற்குள் நானும், வாலு, இது நம்ம ஆளு படங்களை முடித்து விடுகிறேன். அதையடுத்து மீண்டும் நாம் சட்டென்று மாறுது வானிலை படத்தை தொடங்கலாம் என்று சிம்புவே கெளதம்மேனனிடம் சொல்லி விட்டாராம்.
 
அந்த வகையில், அந்த படம் கைவிடப்பட்டதாக பரவியுள்ள செய்தி உண்மையில்லை. அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தலயின் 55வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் தூசு தட்டப்படும் என்கிறார்கள்.

Comments