சைவ’த்தைத் தொடர்ந்து ஷட்டர்!!!!

30th of June 2014
சென்னை:சைவம்’ ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, அடுத்து மலையாளத்தில் ஹிட்டான ‘ஷட்டர்’ படத்தை ரீ-மேக் செய்து இயக்க முடிவு செய்திருக்கிறார் விஜய். லால், சீனிவாசன், வினய், சஞ்சிதா மடத்தில் முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜாய் மேத்தியு இயக்கியிருந்தார்.
 
ஜனரஞ்சக காமெடி படமாக அமைந்த இப்படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை தந்ததோடு, இக்கதை மராத்தி மொழியிலும் ரீ-மேக் ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து இப்போது ‘ஷட்டர்’ படம் விஜய் இயக்கத்தில் தமிழிலும் ரீ-மேக் ஆகிறது.
 
விஜய் இயக்கிய முதல் படமான ‘கிரீடம்’ படமும் மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘கிரீடம்’ படத்தின் ரீ-மேக் தான்! தமிழ் ‘ஷட்டர்’ படத்துக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Comments