ஹேப்பி பர்த்டே பூஜா!!!

25th of June 2014
சென்னை:ஜே.ஜே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா. அஜித், ஆர்யா என தமிழின் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து, பல படங்களில் நடித்துள்ள பூஜாவின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம்
 
பாலா இயக்கிய ‘நான் கடவுள்’. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், சிங்கள மொழிப் படங்களிலும் நடித்துள்ள இவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் தமிழ் படம் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’.
 
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் பூஜா! அவருக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் பூஜாவிற்கு ‘Poonththalir-Kollywood சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Comments