Olichithiram Movie Stills!!! இயக்குனரான ஒளிப்பதிவாளர்!!!

14th of May 2014
சென்னை::Tags : Olichithiram New Movie Photos, Olichithiram Latest Movie Gallery, Olichithiram Unseen Movie Pictures, Olichithiram Film Latest images, Olichithiram Movie Hot Stills, Olichithiram Movie New Pics.சிங்காரவேலன், எஜமான், சின்ன கவுண்டர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் அப்துல் ரகுமான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக ..




































 
சிங்காரவேலன், எஜமான், சின்ன கவுண்டர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் அப்துல் ரகுமான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் ஒளிச்சித்திரம். விஷ்வா, காம்னா சிங் என்ற புதுமுகங்களுடன் தலைவாசல் விஜய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உக்ரைன் நாட்டு அழகி சிரினா ஒரு பாட்டுக்கு ஆடி உள்ளார்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவருக்கு அழகான மனைவி அமைந்து விட்டால் இந்த சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகவும் கொடூரமானவை. அன்பாக பேசியே வீழ்த்த நினைப்பார்கள். அப்படி ஒருவனின் கதை இது. ஒரு மாற்றுத் திறனாளியின் அழகான மனைவியை அடைய நினைக்கும் வில்லனை எதிர்த்து போராட முடியாத மாற்றுத் திறனாளி எப்படி அவன் திட்டத்தை முறியடிக்கிறார் என்பதுதான் கதை.

சென்னை, குற்றாலம் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நல்ல கருத்தை சொல்லும் படம். கமர்ஷியலுக்கு குத்துப்பாட்டு உள்ளிட்ட சில அம்சங்களை சேர்த்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் அப்துல் ரகுமான்.

Comments