- Get link
- X
- Other Apps
6th of May 2014
சென்னை::கத்தி படத்தை தொடர்ந்து விஜய் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் தயாரிக்கிறார்.
முதலில் இந்தப் படத்தில் விஜய்க்கு தீபிகா படுகோன் மட்டும் நாயகியாக
நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த டீமில் புதிதாக சேர்ந்திருக்கிறார்
ஸ்ருதி ஹாஸன்.
தீபிகா படுகோனே நடிப்பதால் எங்கே தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம்
இல்லாமல் போய்விடுமோ என்கிற சந்தேகத்தில் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடிக்க
தயங்கியதாகவும், பின்னர் படத்தின் முழு கதையையும் கேட்ட பிறகே தன்னுடைய
கேரக்டருக்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டதாகவும்
கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் இதில் படத்தில் ஸ்ரீதேவி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
“நான் ஈ” சுதீப் வில்லனாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.
படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது. படத்தின் பிற நடிகர்,
நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களை விரைவில் அறிவிக்க
உள்ளனர்..
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment