பிரதமர் மோடிக்காக லாரன்ஸின் வீடியோ இசை ஆல்பம்!!!

19th of May 2014
சென்னை::இதுவரை நமது இளைஞர்களுக்கு நாம் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டுமானால் செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கம் ஜனாதிபதியானதைப் பற்றி கூறுவது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் இனி இந்தியாவில் டீ விற்ற இளைஞனும் பிரதமராக முடியும் என்று நிரூபித்த நரேந்திர மோடி தன்னம்பிக்கைக்கு புதிய உதாரணமாகி இருக்கிறார் மோடி.
 
இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்த, வருங்கால பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மோடியை பாராட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘மீண்டும் ஒரு சுதந்திரம்’ என்ற இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் நம்ம ராகவா லாரன்ஸ்.
சென்ற வருடம் இதேபோல ரஜினியின் பிறந்தநாளுக்காக வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்தார் லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல, அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
பொதுவாக லாரன்ஸ் எந்த ஒரு செயலை செய்தாலும் தனது குருநாதர் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றுத்தான் செய்வது வழக்கம். இந்த இசை ஆல்பமும் அவரிடம் ஆசி பெற்றே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது...

Comments