மலையாளத்தில் கால் பதிக்கிறார் காஜல் அகர்வால் தங்கை!!!

16th of May 2014
சென்னை::இஷ்டம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நிஷா அகர்வால்.
இவர் நடிகை காஜல் அகர்வாலின் தங்கையும்கூட. எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிஷா அகர்வால் தற்போது மோலிவுட்டிலும் கால் பதிக்கிறார்.

மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான குஞ்சாக்கோ போபன் நடிக்கும் படம் ‘பையா பையா‘. ஜானி ஆண்டனி இயக்கும் இப்படத்தில் நாயகி நிஷா அகர்வால் தான்.

முழுக்க முழுக்க குடும்பப் பின்னணியில் நடக்கும் ஜாலியான கதையாம். நிஷா அகர்வால் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது...

Comments