காட்ஸிலா’ இன்று வெளியாகிறது!!!

16th of May 2014
சென்னை::தோஹோ சீரீஸ், ஜப்பானில் உருவான ‘காட்ஸிலா’ படங்கள் வெகு பிரபலம்.
முதன்முதலாக, 1998-இல் தான், ‘காட்ஸிலா’ படம், அமெரிக்க தயாரிப்பாக உருவாக்கப்பட்டது.
 
2014-வருடத்தின் மிகப் பெரிய 3D படைப்பு தான் வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த ‘காட்ஸிலா’ படம்.
 
160 மில்லியன்  அமெரிக்க டாலர் செலவில் தயாராகியுள்ள இப்படம், வழக்கமான ‘காட்ஸிலா’  படங்களை போல் இல்லாமல், ஒரு புதிய பரிமாணத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. டேவிட் சல்லஹாம் கதைக்கு, மேக்ஸ் போரன்ஸ்டீன் திரைக்கதை அமைத்துள்ளார்.
 
உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிகப் பெரிய, ஒரு திரைக் கதாபாத்திரம், இந்த ‘காட்ஸிலா’.  அதைப் போல், இரு வேறு பெரிய விலங்கினங்களும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
 
இயற்கைக்கு சவால் விடும் விதத்தில் செயலில் இறங்குவது, மனிதனின் பேராசைக்கு ஒரு உதாரணம்.  அப்படி செய்ய முற்படும் போது, இயற்கையின் சீற்றம் சற்று கடுமையாகவே இருக்கும், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.  இப்பட கதை அமைப்பு, இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் அமைக்க பட்டுள்ளது.
 
ஒரு தந்தையும் மகனும் இயற்கையின் சீற்றம் கண்டு நிலமையை சரி செய்ய முற்படுகிறார்கள்! இடையே, குடும்ப பாசம் பற்றியும் உணருகிறார்கள்.
இயற்கை கோபம் கொண்டதன் விளைவுகளை சரியாக்க, இப்பணியில், ‘காட்சிலா’-வும் இறங்குகிறது!
‘காட்ஸிலா’ இன்று பல நாடுகளில் வெளியாகிறது….தமிழிலும் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்…

Comments