28th of May 2014சென்னை::கோச்சடையான்’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் ரொம்பவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரஜினிகாந்த்! இதனை தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் ‘லிங்கா’வில் படு உற்சாகத்துடன் நடித்து வருகிறார் ரஜினி! மைசூரில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வர, இப்படத்தில் ரஜினியுடன் பிரபல பிரிட்டிஷ் நடிகையும், பாடகியுமான லாரன் ஜெ. இர்வினும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ரஜினிக்கு ஒரு ஜோடி அனுஷ்கா, இன்னொரு ஜோடி பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! ரஜினி - சோனாக்ஷி சின்ஹா சம்பந்தப்பட்ட சில காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் மைசூரில் நடந்தது. இதனை தொடர்ந்து ரஜினி, பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜெ. இர்வின் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்! இந்த காட்சிகள் 1940 காலகட்டத்தில் நடப்பது மாதிரியாம்! ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்பதும், இப்படம் நிறைய பொருட் செலவில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது..


Comments
Post a Comment