விஷால் லட்சுமிமேனன் கூட்டணியில் அரை சதம் அடித்த நான் சிவப்பு மனிதன்!!!

30th of May 2014
சென்னை::பாண்டியநாடு ஹிட்டான சூட்டோடு விஷால், லட்சுமிமேனன் கூட்டணியில் வெளியான படம் நான் சிவப்பு மனிதன். முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சுமார் என்ற விமர்சனங்கள் வந்தாலும் விஷால், லட்சுமிமேனன் லிப் லாக் முத்தக் காட்சி. படத்தின் வித்தியாசமான கதை இவற்றின் காரணமாக பெரிய அளவில் லாபம் சம்பாதிக்காமலும்,
 
பெரிய நஷ்டத்தை கொடுக்காமலும் இப்போது அரை சதம் அடித்திருக்கிறது. நீளமான படம், பின்பாதியில் படம் மெதுவாக நகர்கிறது என்ற விமர்சனம் எழுந்ததும் பனிபிரதேசத்தில் கஷ்டப்பட்டு எடுத்த முழு பாட்டுக்கும் கத்திரி போட்டதால் கஷ்டப்பட்டு அரை சதம் அடித்து விட்டான் சிவப்பு மனிதன்.
 
சென்னையில் சத்யம், எஸ்கேப், தேவி, சாந்தி, அபிராமி, லக்ஸ், வில்லிவாக்கம், ஓஎம்ஆர் ஏஜிஎஸ், மாயாஜால், ஆகிய மால்களில் ஓரிரு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற ஊர்களில் கோச்சடையான் அலையில் அடித்துச் செல்லப்பட்டாலும் சிப்டிங் தியேட்டர்களில் ஓரளவு கலெக்ஷனை பார்த்துக் கொண்டிருக்கிறது..

Comments