விஜய் மில்டன் இயக்கத்தில் டி.ஆர்!!!

3rd of May 2014
சென்னை::கோலிசோடா' படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமாடைந்துள்ள ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று அனவைரும் அறிவர். அறியாத ஒன்று, அவர் டி.ராஜேந்தரை ஹீரோவாக வைத்தும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்பது தான்.

பவர் ஸ்டார், பலூன் ஸ்டார், வின் ஸ்டார், சோலார் ஸ்டார் என்று அவ்வபோது கோடம்பாக்கத்தை தாக்கும் இந்த ஸ்டார்களுக்கெல்லாம் மூத்த ஸ்டாராக விளங்கும் அளவுக்கு நம்ம, டி.ஆரின் பேச்சை கேட்கவும் ,வீடியோவைப் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இந்த ரசிகர்களுக்கு நல்ல தீனி போடும் விதமாக, டி.ஆரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை விஜய் மில்டன் இயக்கப்போகிறாராம். தற்பொது விக்ரமை வைத்து படம் இயக்கம் விஜய் மில்டன், இப்படம் முடிந்த பிறகு, டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது..
   

Comments