ரஜினி நடிப்பில் கோச்சடையானைப்பற்றி வதந்தி பரப்பாதீர்கள்: ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை!!!

25th of May 2014
சென்னை::ரஜினி நடிப்பில் உலக முழுவதும் சுமார் 6 ஆயிரம் தியேட்டர்களில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது கோச்சடையான். ஆனால் இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, இது பொம்மை படம் எனறு சிலர் செய்தி பரப்பி விட்டனர். அதோடு, டிவியில் வரும் கார்ட்டூன் படம் மாதிரிதான் கோச்சடையான் என்றும் ஆளாலுக்கு செய்திகள் பற்ற வைத்து விட்டனர்.

அதோடு, டைரக்டர் ராம்கோபால் வர்மா வேறு, ரஜினியின் மார்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், கோச்சடையானில் அவரது மார்பை பெரிதாக காண்பித்திருக்கிறார்கள். இது அவருக்கு அத்தனை அழகாக இல்லை என்று தனது கருத்து தெரிவித்திருந்தார். இப்படி கோச்சடையான் பற்றி ஆளாலுக்கு இயல்பாக சொன்ன கருத்துக்கள்கூட படத்தின் வெற்றியை பாதிக்குமோ என்று படம் திரைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்புவரை ரஜினி வட்டாரம் பெருத்த அதிர்ச்சியில்தான் இருந்தது.

ஆனால், இப்போது எதிர்பார்த்ததை விட தியேட்டர்களில் கூட்டம் காணப்படுகிறது. இருப்பினும், இனிமேலும் யாரும் படத்தைப்பற்றி கருத்து சொல்லக்கூடாது என்பதற்காக ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள செய்தியில், கோச்சடையானை சிலர் பொம்மை படம் என்று சொன்னார்கள். இன்னும் சிலர் குழந்தைகள் டி.வியில் பார்க்கும் படம் என்றார்கள். ஆனால் இப்போது அனைத்து கருத்துக்களையும் முறியடித்து வெற்றிகரமாக கோச்சடையான் ஓடிக்கொண்டிருககிறது. அதனால் இனிமேல் கோச்சடையான் பற்றி கருத்து சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதோடு படத்தை மாபெரும் வெற்றியடைய செய்வதற்காக திருட்டு விசிடி வெளியாகாமல் தடுக்குவும், ரஜினி ரசிகர்கள் பாதுகாபபு கவசமாக செயல்பட்டு வருகிறார்களாம்.
 
ரஜினியின் கோச்சடையான் பொம்மை விமர்சனம் வேண்டாம்: சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்: ராகவா லாரன்ஸ் அறிக்கை!
 
ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நேற்று கோச்சடையான் படத்தை பார்த்தார் பின்னர் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவர் பொம்மையாக நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர். ரஜினி பொம்மையாக நடிப்பது ரசிகர்களை திருப்தி படுத்துமா? என்றார்கள். படம் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறார்கள் பொம்மையாக வந்தாலும், உண்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில், காலம் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக இருக்கும்.

யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஹாலிவுட் தரத்துடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக் குரியது. இந்த படம் வழக்கம் போல் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் திருப்பதி படுத்தும் புது முயற்சி இது, இந்த முயற்சி வரும் காலத்தில் இது போன்ற படங்கள் தமிழில் தயாரிக்க முன்னுதாரணமாக இருக்கும்.

பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் குரல் பதிவாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று நிரூபித்திருக்கிறார்.

இவ்வாறு லாரன்ஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார்...

Comments